சொல் பொருள்
கட்டிக் கொள்ளல் – திருமணம் செய்தல்
சொல் பொருள் விளக்கம்
திருமணம் செய்தலைத் ‘தாலிகட்டு’ என்பது வழக்கம். திருமண நிகழ்வில் கட்டாயம் இடம்பெறுவது, தாலிகட்டு முடிந்துவிட்டால் திருமண விழா முடிந்தது எனப் பந்தியில் உட்காரும் வழக்கமே அதனைத் தெரிவிக்கும். ‘வாழ்த்தினால் என்ன?’ வாழ்த்து திருமண மாவதில்லை! தாலிகட்டுதலே திருமணமாகக் கொள்ளப்படுகிறது. மற்றை மற்றைச் சடங்குகளும் கூட முதன்மையில்லை. அதனால் தான் திருமண விரைவில் தாலிகட்ட மறந்ததுபோல, என்னும் பழமொழி எழுந்தது. தாலிகட்ட மறந்தால் திருமணமே நடந்ததாகாது என்பது தெளிவு. ஆதலால் தாலி காட்டல் இல்லாமலும் தாலி கட்டல் உண்டு என்பதே பொருளாம். முடிச்சுப் போடுதல் கட்டுதல் தானே. மூணுமுடிச்சுப் போடு என்பர். அவிழக்கூடாது என்னும் அக்கறை.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்