சொல் பொருள்
கட்டிப்போடுதல் – அடங்கச் செய்தல்
சொல் பொருள் விளக்கம்
கயிற்றால் கட்டுதல்தான் கட்டுதல் என்பது இல்லை. சொல்லால் கட்டுதலும் கட்டே. கட்டளை, கட்டுரை, கட்டுப்பாடு, கட்டுப்படுத்தல், கட்டுமானம் என்பனவெல்லாம் கயிற்றொடு தொடர்பில்லாக் கட்டுகளே. சிலர் கொதித்து எழும் நிலையிலும் ஒரு சொல்லால், ஒரு விரலசைப்பால், ஒரு கண்ணிமைப்பால் கொதியாது அடங்கியிருக்கச் செய்து விடுவது உண்டு. அவ்வாறு அடங்கியவர், “என்னைக் கட்டிப் போட்டு விட்டீர்கள்; இல்லாவிட்டால் என்ன நடக்கும் நடந்திருக்கும், என்பது எனக்கே தெரியாது” என்பது உண்டு. பாரதக் கதையில் தருமன் ஆணைக்குக் கட்டுப்பட்டு நின்ற வீமன் முதலானோர் கொதிப்படைய “கட்டுண்டோம் பொறுத்திருப்போம்; காலம் மாறும், என்று தருமன் கூறியது கருதத்தக்கது.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்