சொல் பொருள்
கட்டு – வருவாய்க்குத் தக்கவாறு கட்டுப் படுத்திச் செவவிடல்.
மட்டு – எவ்வளவு தான் வருவாய் வந்தாலும், திட்டப்படுத்தி ‘இதற்கு இவ்வளவே’ என்று மட்டுப்படுத்தி (எல்லை அல்லது அளவு படுத்தி)ச் செலவிடல்.
சொல் பொருள் விளக்கம்
“கட்டுமட்டு உடையன்;” “கட்டுமட்டாகச் செலவு செய்வான்” என்பன வழக்குகள். “கட்டுமட்டானவன்” எனப் பொதுவாகக் கூறுவதும் உண்டு. இனி இதனைக் ‘கட்டுமெட்டு’ என்பதும் உண்டு.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்