கணவிரம் என்பது செவ்வலரி
1. சொல் பொருள்
(பெ) செவ்வலரி
2. சொல் பொருள் விளக்கம்
செவ்வலரி
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
Nerium indicum Mill, Red Oleander, Nerium oleander.
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
கணவிர மாலை இடூஉ கழிந்து அன்ன – அகம் 31/9 செவ்வலரி மாலை இடப்பட்டு இறந்து கிடந்ததைப் போல இது கணவிரி என்றும் கணவீரம் என்றும் அழைக்கப்படும்.
சினை வளர் வேங்கை கணவிரி காந்தள் – பரி 11/20 பெரும் தண் கணவீர நறும் தண் மாலை – திரு 236
கணவிர மாலையின் கட்டிய திரள் புயன் - மணி:3/104
கணவிர மாலை கைக்கொண்டு என்ன - மணி:5/48
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்