சொல் பொருள்
(வி) 1. ஒன்றுகூடு, திரள், 2. நெருங்கு,
சொல் பொருள் விளக்கம்
ஒன்றுகூடு, திரள்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
join, come together
be crowded together
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: களிறு கண்கூடிய வாள் மயங்கு ஞாட்பின் – அகம் 322/7 ஆண்யானைகள் திரண்ட வாட்கள் பின்னிய போர்க்கண்ணே கண்கூடு இருக்கை திண் பிணி திவவின் ஆய் தினை அரிசி அவையல் அன்ன வேய்வை போகிய விரல் உளர் நரம்பின் – பொரு 15-17 (ஒன்றோடொன்று)நெருங்கின இருப்பையுடையதும், திண்ணிய பிணிப்புடையதும் ஆகிய வார்க்கட்டினையும்; ஆய்ந்தெடுத்த தினை அரிசியின் குற்றலைப் போன்ற (யாழ் நரம்பின் குற்றமாகிய)வேய்வை போக விரலால் அசைக்கும் நரம்பின்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்