சொல் பொருள்
(பெ) 1. கண்டத்திரை, பலவண்ணத்திரை
2. துண்டம், துண்டு,
கண்டம் என்பதற்கு ‘முள்’ என்னும் பொருள் மருத்துவ வழக்கு
குழி என்னும் பொருளில் ஏலத் தோட்ட வழக்காகும்
சொல் பொருள் விளக்கம்
துண்டு துண்டாய பெரு நிலப்பரப்பும், ஒரு பெரும்பொருளைத் துண்டு துண்டாக்கிய சிற்றளவும் கண்டம் எனப்படுதல் பொது வழக்கு. கணக்கிட்டுத் துண்டாக்குதல் கண்டிவைத்துத் தறித்தல் என்பர். சோதிடர் கணக்கிட்டு இந்த வயதில் உனக்குக் கண்டம் இருக்கிறது என்பதும் பொதுமக்கள் அவ்வாறு சொல்வதும் வட்டார வழக்காகும். கண்டம் என்பதற்கு ‘முள்’ என்னும் பொருள் மருத்துவ வழக்கு. எ-டு: கண்டங்கத்திரி: பொது இலக்கிய வழக்கும் உண்டு. எ-டு: கண்டல் வேலி (சிலப்பதிகாரம்) கண்டல் = தாழை. குழி என்னும் பொருளில் ஏலத் தோட்ட வழக்காகும்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
multi-colored curtain
piece, fragment
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நெடும் காழ் கண்டம் கோலி அகம் நேர்பு – முல் 44 நெடிய குத்துக்கோலுடன் பண்ணின கண்டத்திரையை வளைத்து, (அரசனுக்குரிய)இடமாகக் கொண்டு எரி கனன்று ஆனா குடாரி கொண்டு அவன் உருவு திரித்திட்டோன் இ உலகு ஏழும் மருள கரு பெற்று கொண்டோர் கழிந்த சேய் யாக்கை நொசிப்பின் ஏழ் உறு முனிவர் நனி உணர்ந்து வசித்ததை கண்டம் ஆக மாதவர் மனைவியர் நிறை_வயின் வசி தடி சமைப்பின் சாலார் தானே தரிக்க என அவர் அவி உடன் பெய்தோரே அழல் வேட்டு – பரி 5/34-41 நெருப்பு கனன்று தணியாமல் கொழுந்துவிட்டு எரியும் தன் மழுப்படையைக் கொண்டு அந்தக் கருவின் உருவத்தைப் பல கண்டங்களாகச் சிதைத்துக் கொடுத்துவிட்டான், இந்த உலகம் ஏழும் மருண்டுபோக, இந்திரனிடமிருந்து இந்தக் கருவினைப் பெற்றுக்கொண்டோர், சிதைக்கப்பட்ட கருவாகிய குழந்தை உடலை, எதிர்காலத்தை உணரும் ஆற்றல் பெற்ற ஏழு என்ற எண்ணை அடையாகக் கொண்ட முனிவர்கள் நன்றாகத் தெளிந்து, பிளவுபட்டதைத் துண்டங்களாக, அம் முனிவர்களின் மனைவியர், தம் கற்புடைமையில், அந்தப் பிளக்கப்பட்ட துண்டுகளைத் தாங்கி வளர்த்தால் அமைவுடையவராகமாட்டார் என்று எண்ணி, ‘தீயே அவற்றைத் தாங்குவதாக’ என்று அந்த முனிவர்கள் வேள்வியுணவாக, ஒன்றாகச் சேர்த்துப் போட்டார் தீயினால் வேள்வி செய்து;
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு வழக்குச் சொல்
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்