சொல் பொருள்
கண்ணசைத்தல் – குறிப்புக் காட்டல்
சொல் பொருள் விளக்கம்
கண்ணசைத்தல் என்பது, அசைப்பைக் குறிக்காமல் வேறோர் உட்பொருளைக் குறித்துக் காட்டலேயாம். ‘கண் சாடை காட்டுதல்’ என வழக்கில் உள்ளது இக்கண்ணசைப்பாம். காரிகையார் கடைக் கண் காட்டல் காதலர் கண்ணடித்தல் என்பவை வேறு வேறு. அவ்வழக்கில் அவற்றைக் காண்க. தலைமையுடைய ஒருவர் பிறரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதைத் தம் பணியாளர்க்கு அல்லது தம் குடும்பத்தவர்க்குக் கண்ணசைப்பால் காட்டுவதே இக்கண்ணசைப்பாம். “கண்ணசைத்தும் உனக்குத் தெரியவில்லையே! நீ எப்படிப் பிழைக்கப்போகிறாய்?” என்பது குறிப்பறிந்து செயலாற்றாதவர் மேல் சொல்லப்படும் குறைமொழி.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்