சொல் பொருள்
கண்ணடித்தல் – காதல் குறிப்புக் காட்டல்
சொல் பொருள் விளக்கம்
இது பெரும்பாலும் காதலன் காதலிக்கு உரைக்கும் குறிப்புரையாகும். உள்ளத்து உணர்வு முகத்தில் முதிரும்; முகத்தின் முதிர்வு கண்னில் தெரியும்; அக்கண்ணின் முதிர்வு கண்ணின் கடைமணியிற் புலனாம் என்பது மெய்ப்பாட்டுக் கூறு.
கண்ணடித்தல் காதலைப் புலப்படுத்துவதுடன் பிறர் வரவு, கூறத்தக்கது தகாதது, புறப்படலாம், புறப்படவேண்டா முதலான கெழுதகைக் காதற் பேச்சுகளையும் கண்ணடித்தலே பேசிடும். ஆதலால் கண்ணடித்தல் படிப்பு, காதலில் பெரும் படிப்பு என்பர். ஏனெனின் அதனைப் படியாக்கால் வேண்டா இடருக்கெல்லாம் வித்தாகிவிடும் என்பது அவர்கள் தெளிவு.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்