கண்ணீரும் கம்பலையும் என்பதன் பொருள் அழுதுஅரற்றுதல்.
1. சொல் பொருள்
கண்ணீர் – அழுகை.
கம்பலை – அரற்றுதல்.
மொழிபெயர்ப்புகள்
2. ஆங்கிலம்
Grief crying spells
3. சொல் பொருள் விளக்கம்
அழுது அரற்றுதல் என்பது ‘கண்ணீரும் கம்பலையுமாக’ எனச் சொல்லப்படும். கண்ணீர் என்பது வெளிப்படை. ‘கம்பலை’ அரவம், ஒலி, அரற்று என்னும் பொருள் தருவது. ஆரவாரமிக்க சிறுவரும் சிறுமியரும் “கம்பலை மாக்கள்” எனப்படுவர். (சிலம்பு. ஊர் சூழ்.29)
4. பயன்பாடு
அவள் கண்ணீரும் கம்பலையுமாக இருக்கிறாள்
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்
Thank you