சொல் பொருள்
கண்பார்த்தல் – அருளல்
சொல் பொருள் விளக்கம்
கண்திறத்தல், கண்நோக்கு என்பவும் இப்பொருளவே. கண்ணைத்திறந்து பார்த்தலெல்லாம் அருளல் பொருளில் வருவன வல்ல, ஒருவர் நோயுற்றபோது கடவுள் தான் கண்பார்க்க வேண்டும் என்பர். பண்டுவரையா நீங்கள் கண்பார்த்தால் தான் ஆகும் என்பர். ‘கண்பார்வை’ படவேண்டும் என்பதற்காகவே பெருஞ்செல்வர் பெரும்பதவியர் ஆகியோர் திருமுன் காத்துக் கிடப்பவர் பலர். கண்பார்த்தல் என்பது பொதுப் பொருளில் நீங்கிக் கண்ணோட்டம் என்னும் சிறப்புப் பொருளில் வரும் வழக்கு ஈதாம்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்