சொல் பொருள்
கண்மூடல் – சாதல்
சொல் பொருள் விளக்கம்
கண்ணைமூடல் உறங்குதலுக்கும் உண்டே, கண்ணிமை மூடாமலே உறங்குபவரும் உளர். இக்கண்மூடல் இறப்பைக் குறிக்கும். கண்ணடைத்தல் என்பதும் இது. இறப்பைக் குறிக்கும் வழக்கு மொழிகள் மிகப்பல. ‘இறப்பு’ என்பதும் கூட நேர் சொல் அன்று. வழக்குச் சொல்லே. ‘இறத்தல்’ கடத்தல் என்னும் பொருட்டது. வீட்டைக் கடந்து நன்காட்டை அடைதல் இறப்பு எனப்பட்டது. சாவின்மேல் கொண்ட அச்சம் அச்சொல்லைச் சொல்லவும் விரும்பாமல் குறிப்பாலும், மங்கல வழக்காலும், உறுப்புச் செயலறுதலாட்சியாலும் சொல்ல வைத்ததாம். கண்மூடல் என்பது உறுப்புச் செயலறுதலாட்சியால் சாவை உணர்த்திற்று. பேச மறத்தல்’ ‘மூச்சு விடமறத்தல்’ என்பவையும், இவ்வகையே.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்