சொல் பொருள்
கதை – சிறுகதை தொடர்கதை போல்வனவாம் புனைவுகள்.
நொடி – விடுகதைபோல்வனவாம் குறிப்பு மொழிகள்.
சொல் பொருள் விளக்கம்
பண்டு பாவால் கூறிய புனைவு ‘காதை’ எனப்பெற்றது; பின்னர் பாவால் கூறியது கதை எனவும் வழங்கியது. முன்னதற்குச் சிலம்பும் மேகலையும் பின்னதற்குப் பெருங்கதையும் சான்று.
நொடி, குறிப்புமொழி என்பது ‘ நொடிவது போலும்’ என வரும் சிலம்பாலும், தொல்காப்பியத்தில் வரும் உரைநடை வகையாலும் விளக்கமாம். நொடிப் பொழுதில் வெளிப்படுத்தும் குறிப்பு நொடியெனப் பெற்றிருக்கலாம். நொடித்தல் கூறுதல். வழக்குச் சான்று?
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்