சொல் பொருள்
கத்தி கட்டல் – சண்டைக்கு ஏவி விடல்
சொல் பொருள் விளக்கம்
‘சேவற்போர்’ ஒரு போட்டியாக அண்மைக் காலம் வரை நடந்து வந்தது. போர்க்குணம் உடையது சேவல். அதன் இயல்பை அறிந்து அவற்றை மோதவிட்டுப் பார்த்து மகிழ்ந்தவர்கள், அவற்றின் கால்களில் கத்தி கட்டிவிட்டுப் போருக்கு விட்டனர். சேவல்கள் ஏவிவிட்டவுடன் எதிரிட்டுத் தாக்கிக் கத்தி பிளக்கக் குருதி கொட்டினாலும் உயிர் போனாலும் பின் வாங்காது தாக்கும். வெல்லும்; அல்லது வீழும். இவ்வழக்கில் இருந்து இருவரை ஏவிவிட்டுச் சண்டை போட அல்லது பகைத்துத் தாக்க வைப்பது கத்திகட்டலாக வயதது.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்