சொல் பொருள்
(வி) கொதி, எரி, தகி
2. (பெ) நெருப்பு
சொல் பொருள் விளக்கம்
(வி) கொதி, எரி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
boil, be hot, burn with intense heat, fire
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குவளை மா இதழ் புரையும் மலிர் கொள் ஈர் இமை உள்ளகம் கனல உள்ளு-தொறு உலறி – அகம் 19/10-12 குவளையின் கரிய இதழைப் போன்ற நீர் மிகுதல் கொண்ட குளிர்ந்த கண்ணிமைகள் உள்ளம் கொதித்தலால் நினைக்குந்தோறும் வற்றி கனல் பொருத அகிலின் ஆவி கா எழ – பரி 10/72 தீயில் வெந்த அகிலின் புகை அந்தச் சோலைமுழுக்கப் பரவ
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்