சொல் பொருள்
(வி) 1. நெருக்கமாயிரு, 2. மிகு,, 3. ஒலி எழுப்பு,, 4. நிறைந்திரு,, 5. திரட்சியாய் இரு,
சொல் பொருள் விளக்கம்
நெருக்கமாயிரு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
be crowded, be abundant, sound, be full, be stout
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கல் மிசை உருப்பு அற கனை துளி சிதறு என – கலி 16/7 பாறைகளின் மேலுள்ள வெம்மை அற்றுப்போகும்படி செறிவாகத் துளிகளைப் பொழிவாயாக என்று காமம் கனைந்து எழ கண்ணின் களி எழ – பரி 10/63 காம உணர்வு மிகுந்து எழ, அதனால் கண்ணில் வெறி தோன்ற ஆடுதொறு கனையும் அம் வாய் கடும் துடி – அகம் 79/13 ஆடும்பொழுதெல்லாம் ஒலிக்கும் அழகிய வாயினையுடைய கடிய துடியினையும் மண் கனை முழவின் தலைக்கோல் கொண்டு – மலை 370 (தோலில் பூசப்பட்ட கரிய)சாந்து நிறைந்த முரசின் (அதை எடுத்துச்செல்லக் கட்டிய)காவுமரத்தைக் கையில் பிடித்து சினை பசும்பாம்பின் சூல் முதிர்ப்பு அன்ன கனைத்த கரும்பின் கூம்பு பொதி அவிழ – குறு 35/2,3 கருவுற்ற பச்சைப்பாம்பின் சூல் முதிர்ச்சி போன்ற பருத்திருந்த கரும்பின் குவிந்த அரும்பு மலரும்படி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்
அருமையான விளக்கம்