சொல் பொருள்
கவடு – அடிமரத்தில் இருந்து இரண்டாகப் பிரிவது கவடு; இடுப்பில் இருந்து இரண்டாகப் பிரியும் தொடையூடு பகுதியும் கவடு.
கப்பு – கவட்டில் இருந்து இரட்டையாகப் பிரியும் கிளை கப்பு.
சொல் பொருள் விளக்கம்
கப்பு என்பது பொருளால் இரண்டாகப் பிரிதல் என்னும் பொதுமைக்குரியது ஆயினும் கவட்டினும் கப்புச் சிறிதெனக் கொள்க.
கவை, கவட்டை, கவலை, கவைக்கோல் என்பனவெல்லாம் இரண்டாகப் பிரிவன என்னும் பொருளனவாம். தொடைச் சந்தினைக் ‘கப்பு’ என்பது கவை, கப்பு வேறுபாடுணரா வழக்காம்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்