சொல் பொருள்
வெளியிடக் கூடாத செய்தியைக் கமுக்கம் என்பது தென்னக வழக்கு
கமுக்கம் – வெளிப்படுத்தாமை
சொல் பொருள் விளக்கம்
வெளியிடக் கூடாத செய்தியைக் கமுக்கம் என்பது தென்னக வழக்கு. கமுக்கக் கூடு (கம்புக்கூடு) என்பது தோள் பட்டையின் கீழ்வாய்க் குடைவு. அது பிறர் பார்வையில் படாத மறை – கமுக்கப் – பகுதி. அதுபோன்றது என்ற உவமை இஃதாம்.
தோளின் உள் வாய்க் குடைவுப் பகுதி வெளிப்படாமல் மூடப்பட்டு இருப்பது. கையின் மறைவுக்கு உள்ளடங்கி இருக்கும் அப்பகுதி கமுக்கம் என்றும், கமுக்கக்கூடு (கம்புக்கூடு) என்றும் வழங்கப்படும். அது மறைவாக இருப்பதுபோல வெளிப்படாது மறைக்கப்படும் செய்தி அல்லது மறக்கப்படவேண்டிய செய்தி ‘கமுக்கம்’ எனப்படும். ‘இரகசியம்’ என்னும் வேற்றுச்சொல்லாட்சி பெரிதும் வழக்கில் ஊன்றியமையால் ‘கமுக்கம்’ எனும் தமிழ்ச் சொல் வழக்கில் அருகியது. பாவாணர் அதனைப் பெரிதும் ஆட்சிக்குக் கொண்டு வந்தார். அந்தச் செய்தி நமக்குள் கமுக்கமாக இருக்கட்டும் என்பது வழக்கு.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்