Skip to content

சொல் பொருள்

(பெ) கம்மாளன்,

சொல் பொருள் விளக்கம்

கம்மாளன்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

smith, artisan

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

செம்பினாலான பானையை வனைவர் கம்மியர் எனப்பட்டனர்.

மண் திணி ஞாலம் விளங்க கம்மியர்
செம்பு சொரி பானையின் மின்னி – நற் 153/2,3

மண் திணிந்த இந்த உலகம் ஒளிர்ந்துவிளங்க, கொல்லர் கடையும்போது
செம்புப்பொறிகளைச் சொரியும் பானையைப் போல மின்னலிட்டு,

நெசவுத்தொழில் செய்வோரும் கம்மியர் எனப்பட்டனர்.

குறியவும் நெடியவும் மடி தரூஉ விரித்து
சிறியரும் பெரியரும் கம்மியர் குழீஇ – மது 520,521

சிறியனவும் பெரியனவுமாகிய மடிப்புடைவைகளைக் கொண்டுவந்து விரித்து,
சிறியோரும் பெரியோருமாகிய நெசவாளர்கள் திரண்டு,

வேலைப்பாடு மிக்க விசிறிகளைச் செய்பவர்களும் கம்மியர் எனப்பட்டனர்

கைவல் கம்மியன் கவின் பெற புனைந்த
செம் கேழ் வட்டம் சுருக்கி – நெடு 57,58

கை(வேலைப்பாட்டில்) சிறந்த கைவினைக்கலைஞன் அழகுபெறச் செய்த
சிவந்த நிறத்தையுடைய விசிறி (மூடிச்)சுருக்கிடப்பட்டு

மரவேலை செய்யும் தச்சர்களும் கம்மியர் எனப்பட்டனர்

கைவல் கம்மியன் முடுக்கலின் புரை தீர்ந்து
ஐயவி அப்பிய நெய் அணி நெடு நிலை – நெடு 85,86

கைத்தொழில் வல்ல தச்சன் (ஆணிகளை நன்றாக)முடுக்கியதனால் இடைவெளியற்று,
வெண்சிறுகடுகு அப்பிவைத்த நெய்யணிந்த நெடிய நிலையினையுடைய,

முத்துக்களைக் கொண்டு அணி செய்வோரும் கம்மியர் எனப்பட்டனர்

கைவல் கம்மியன் கவின் பெற கழாஅ
மண்ணா பசு முத்து ஏய்ப்ப – நற் 94/4,5

கைத்தொழிலில் வல்ல கம்மியன் அழகுபெறக் கழுவாத
தூய்மைசெய்யாத பசுமுத்தைப் போல

பொற்கொல்லர்களும் கம்மியர் எனப்பட்டனர்

பொன் செய் கம்மியன் கைவினை கடுப்ப – நற் 313/2

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *