சொல் பொருள்
கயிறு கட்டல் – திருமணம்
சொல் பொருள் விளக்கம்
தாலி கட்டல், மஞ்சள் கயிறு கட்டல், முடிச்சுப் போடல் மூன்று முடிச்சுப் போடல் என்பனவெல்லாம் இதுவே.
மங்கலம், தாலி என்பவற்றைத் திருப்பூட்டெனப் பூட்டினாலும் அதனைக் கயிற்றில் நுழைத்துக் கழுத்தில் கட்டுவதே வழக்கம். வெறுங்கயிற்றை மஞ்சள் துண்டு கட்டிப் போடுவதும் கூட வழக்கில் இருந்தது. கயிறு மட்டுமே அடையாளமாக இருப்பதும் உண்டு. ஆதலால் தங்கத்தில் இருந்தாலும் தாலிக் கயிறு, தாலிச்சரடு என்னும் வழக்கம் மாறாமல் இன்றும் உள்ளது.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்