சொல் பொருள்
வளர்ச்சி குன்றிக் கருநிறம் கொண்டு போனால் கரண்டு போவான் என்பது முகவை வழக்கு
சொல் பொருள் விளக்கம்
நல்ல உடலுடன் இருந்தவன் – இருக்க வேண்டியவன் – வளர்ச்சி குன்றிக் கருநிறம் கொண்டு போனால் கரண்டு போவான் என்பர். கர் என்னும் வேர்வழிவந்த இச்சொல் முதலாவதாக வண்ணம் குறித்து, அதன்பின் வளக்குறைவு குறித்து ஆயது. எ-டு: கரடு, குருதி சுண்டினால் சிவந்த உடலரும் கரியர் ஆதல் கண்கூடு. கரண்டு போனான்(ள்) என்பது முகவை வழக்கு.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்