சொல் பொருள்
கரப்பு, கரத்தல் என்பவை மறைத்தல் பொருளவை.
கரந்து (மறைந்து) செல்லும் பாம்பைக் கரப்பு என்பது இராசபாளைய வட்டார வழக்கு
சொல் பொருள் விளக்கம்
கரப்பு, கரத்தல் என்பவை மறைத்தல் பொருளவை. இயல்வது கரவேல் என்பது ஆத்திசூடி. கரந்து (மறைந்து) செல்லும் பாம்பைக் கரப்பு என்பது இராசபாளைய வட்டார வழக்கு. “நஞ்சுடைமை தானறிந்து நாகம் கரந்துறை யும்” நெஞ்சில் கரவுடையார் தம்மைக் கரப்பர்; ‘கரவிலார் தம்மைக் கரவார்’ ஒருபாடலில் இத்தனை கரப்புச் சான்று.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்