சொல் பொருள்
(பெ) பனை மட்டையின் பல்போன்ற கூரிய முனை,
குளம்பி(காபி)க் கொட்டை வடிநீர் கரியதாய் இருப்பதால் அதனைக் கருக்கு என்பது நாஞ்சில் வட்டார வழக்கு
இளநீரைக் கருக்கு என்பதும் அவ்வட்டார வழக்கில் இருப்பதாகக் குறிப்பிடுதல் உண்டு
சொல் பொருள் விளக்கம்
குளம்பி(காபி)க் கொட்டை வடிநீர் கரியதாய் இருப்பதால் அதனைக் கருக்கு என்பது நாஞ்சில் வட்டார வழக்கு. இனி இளநீரைக் கருக்கு என்பதும் அவ்வட்டார வழக்கில் இருப்பதாகக் குறிப்பிடுதல் உண்டு. அது முன்னது போல் பொருந்தி வரவில்லை. ஏனெனில் பொதுமக்கள் வழக்கு புனைவோ சிக்கலோ அற்றதாகவும் வெளிப்படையாகப் பொருந்திய பொருள் தருவதாகவும் இருக்கும்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
jagged edge of the palmyra leaf stalk
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பனை தலை கருக்கு உடை நெடு மடல் குருத்தொடு மாய – குறு 372/1 பனைமரத்தின் உச்சியிலுள்ள கருக்கினையுடைய நெடிய மடல்கள் குருத்தோடு மறைந்துபோக
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு வழக்குச் சொல்
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்