கருவிளை என்பதை, இக்காலத்தில் சங்குப்பூ என்கின்றனர்
1. சொல் பொருள்
(பெ) காக்கணம், காக்கட்டான், உயவை, யாப்பிலக்கண வாய்பாடு
2. சொல் பொருள் விளக்கம்
தோற்றத்தில் சங்கின் விரிவாய் போலத் தோன்றம் தருவதால் இதனை சங்குப்பூ கூறுகின்றனர். இலங்கையில் இதனை நீல காக்கணை பூ என்ற பெயரால் அழைப்பர். வெள்ளை, கருநீலம், ஊதா, வெண்மை கலந்த கருநீலம், ஊதா கலந்த கருநீலம் என பல்வேறு வண்ணங்களில் பூக்கும்
- மயில்-பீலியின் கண் போல் இருக்கும்
- கண்ணைப்போல் இருக்கும்
காக்கணம் செடி, மாமூலி, காக்கட்டான், நீல காக்கட்டான், சங்கங்குப்பி, சங்க புஷ்பி, சங்குபுஷ்பம், கன்னிக் கொடி, இரிகன்னு, கருவிளை, காக்கரட்டான், சுபுஷ்பி, மோஹநாசினி, ஸ்வேதை, ஸ்வேதாஎனவும் அழைக்கப்படுகின்றது.
கிரிகணிக்கி, கிர்குணா என்று கன்னடத்திலும், ஷேங்கபுஷ்ப என்று மராத்தி மற்றும் கொங்கணியிலும், கோகர்ணிகா, அர்த்ரகர்ணி என்று சமஸ்கிருதத்திலும் அழைக்கப்படுகின்றது.
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
Mussel-shell creeper, clitoria ternatea, blue butterfly, butterfly pea, bluebell vine, blue pea, kordofan pea, darwin pea
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
1.இது கொடியாக புதர் போல் இருக்கும். இதன் பூ நீலநிற மணி போல் இருக்கும். மணி கண்டு அன்ன மா நிற கருவிளை ஒண் பூ தோன்றியொடு தண் புதல் அணிய – நற் 221/1,2 நீலமணியைக் கண்டாற்போன்ற கரிய நிறமுள்ள கருவிளை மலர், ஒள்ளிய பூவாகிய செங்காந்தளோடு குளிர்ச்சியுள்ள புதர்களை அழகுசெய்ய, 2.இதன் பூ கண் போல் இருக்கு தண் புன கருவிளை கண் போல் மா மலர் – நற் 262/1 குளிர்ச்சியான கொல்லையில் வளர்ந்த கருவிளம்பூவின், கண் போல மலர்ந்த, பெரிய பூவானது 3.இதன் பூ மயில் தோகையிலுள்ள கண் போல் இருக்கும். பீலி ஒண் பொறி கருவிளை ஆட்டி – குறு 110/4 மயில்தோகையின் ஒளிரும் கண்ணினையுடைய கருவிளம்பூவை ஆட்டி
எருவை செருவிளை மணி பூ கருவிளை/பயினி வானி பல் இணர் குரவம் - குறி 68,69 மணி கண்டு அன்ன மா நிற கருவிளை/ஒண் பூ தோன்றியொடு தண் புதல் அணிய - நற் 221/1,2 தண் புன கருவிளை கண் போல் மா மலர் - நற் 262/1 பீலி ஒண் பொறி கருவிளை ஆட்டி - குறு 110/4 கண் என கருவிளை மலர பொன் என - ஐங் 464/1 கருவிளை முரணிய தண் புதல் பகன்றை - அகம் 255/11 நீர் வார் கண்ணின் கருவிளை மலர - அகம் 294/5 கருவிளை கண் மலர் போல் பூத்தன கார்க்கு ஏற்று - கார்40:9/1
கருவிளை விழியார் கவரி கால் அசைப்ப கனக சிங்காதனத்து இருத்தி - சீறா:143/3
கருவிளை வரி விழி கன்னி ஆமினா - சீறா:517/1
சண்பகம் கருவிளை செம் கூதாளம் - மது:22/40
கருவிளை புரையும் மேனியன் அரியொடு - மது:22/89
புல்லிய கொம்பு தான் ஓர் கருவிளை பூத்ததே போல் - சிந்தா:1 319/3
கரு உடை முகில்வண்ணன் காயாவண்ணன் கருவிளை போல் வண்ணன் கமல வண்ண - நாலாயி:509/3 கருவிளை ஒண் மலர்காள் காயா மலர்காள் திருமால் - நாலாயி:589/1 நான் அவல் அப்பம் தருவன் கருவிளை பூ அலர் நீள் முடி நந்தன் தன் போர் ஏறே - நாலாயி:1893/2,3 பைம் பொழில் வாழ் குயில்காள் மயில்காள் ஒண் கருவிளைகாள் வம்ப களங்கனிகாள் வண்ண பூவை நறு மலர்காள் - நாலாயி:590/1,2 கார் தண் முகிலும் கருவிளையும் காயா மலரும் கமலப்பூவும் - நாலாயி:622/1 கனை ஆர் கடலும் கருவிளையும் காயாவும் - நாலாயி:2018/1 விழி கயல் அயில் பகழி வருணி கருவிளை குவளை விடம் என நாயேன் - திருப்:147/3 வெந்து போன புராதன சம்பராரி புராரியை வென்ற சாயகமோ கருவிளையோ கண் - திருப்:103/2
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்