Skip to content
கறங்கு

கறங்கு –ஒலி, சத்தம்;காற்றாடி, கறங்கோலை(ஓலைக் காற்றாடி);சுழற்சி, சுற்றி வருதல், சுழலு,

சொல் பொருள்

(வி) ஒலி, சத்தம்

காற்றாடி, கறங்கோலை(ஓலைக் காற்றாடி)

சுழற்சி, சுற்றி வருதல், சுழலு,

சொல் பொருள் விளக்கம்

ஒலி, 

கறங்குதல் சுற்றி வருதல் என்னும் பொருளில் விளவங்கோடு வட்டாரத்தில் வழங்குகின்றது

கறங்கு என்பது வட்டம், வளையம் என்னும் பொருளது. கண்களின் வடிவம் வட்டம்; அக்கண் வடிவாகச் செய்யப்பட்டது பலகணி; ‘மான் கண் மாளிகை’ என்பது சிலம்பு. வட்ட வளையக் கண்களாக அமைத்த அதனைக் கறங்கு என்பார் கம்பர். “கறங்கு கால் புகா” என்பது அது. கறங்குதல் சுற்றி வருதல் என்னும் பொருளில் விளவங்கோடு வட்டாரத்தில் வழங்குகின்றது.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

sound

a toy wind whirl

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பலவிதமான வாத்தியங்களைக் கொண்ட பல்லியம் எழுப்பும் ஒலி.

அந்தர பல் இயம் கறங்க – திரு 119

பெரிய முகப்பைக் கொண்ட முரசம் இடைவிடாமல் ’டம டம டம’ என எழுப்பும் ஒலி

மா கண் முரசம் ஓவு இல கறங்க – மது 733

(ஓவு = இடையறவு)

பசு மாடுகளின் கழுத்தில்கட்டப்பட்டிருக்கும் மணிகள் ‘கண கண கண’என எழுப்பும் ஒலி

கறங்கு மணி துவைக்கும் ஏறு உடை பெரு நிரை – மலை 573

(ஏறு = காளை, நிரை = பசுக்கூட்டம்)

அருவி நீர் விழும்போது ’டம டம டம’ என எழுப்பும் ஒலி

கறங்கு இசை அருவி வீழும் – ஐங் 395/5

மேகங்கள் ‘கட கட கட’ என உறுமும்போது எழும்பும் ஓசை

கறங்கு குரல் எழிலி கார் செய்தன்றே – ஐங் 452/2

(எழிலி = மேகம்)

சிள்வண்டுகள் ‘கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்’ என எழுப்பும் ஓசை

கறங்கு இசை சிதடி பொரி அரை பொருந்திய – பதி 58/13

(சிதடி = சிள்வண்டு)

ஊதுகொம்புகள் பூம்,பூம்,பூம் என்று எழுப்பும் ஓசை

கறங்கு இசை வயிரொடு வலம் புரி ஆர்ப்ப – பதி 92/10

(வயிர் = ஊதுகொம்பு, Large trumpet, horn, bugle)

கிராமங்களில் விழாக்கொண்டாடும்போது எழும்பும் பல்வித ஓசை

கறங்கு இசை விழவின் உறந்தை குணாது – அகம் 4/14

(விழவு= விழா)

இந்த ஓசையைக்கேட்டுப் பறவைகள் வெருண்டு ஓடும்

கறங்கு இசை வெரீஇ பறந்த தோகை – அகம் 266/18

(வெரீஇ=வெருண்டு)

மழை பெய்து நின்றவுடன் தவளைகள் கூட்டமாய் எழுப்பும் ஒலி

வரி நுணல் கறங்க தேரை தெவிட்ட – ஐங் 468/1

(நுணல்= தவளை)

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

http://sangacholai.in/sangpedia-vau.html#%E0%AE%B5%E0%AF%8C%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *