சொல் பொருள்
கறிச்சை என்பது வண்டு என்னும் பொருளில் வழங்குகின்றது
சொல் பொருள் விளக்கம்
கறங்கு என்பது, சுற்றுதல் என்னும் பொருளில் விளவங்கோடு வட்டாரவழக்குச் சொல்லாக இருப்பதால், அப்பொருள் அடியாகவே கறிச்சை என்பது வண்டு என்னும் பொருளில் வழங்குகின்றது. வண்டு என்பது வளைந்து செல்வது என்னும் பொருளதே. வண்டு கட்டுதல் என்பதை அறிக. ஒரு கால் முதற்கண் கறிச்சை என்பது கருநிற வண்டைக் குறித்து, பின்னர்ப் பொது வகையில் வண்டுக்கு ஆகியிருக்கலாம்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்