சொல் பொருள்
(பெ) 1. உழுவதற்குப்பயன்படும் மரத்தாலான கருவி, 2. இசைக்கருவிகள் போன்றவை வைக்கும் பை,
சொல் பொருள் விளக்கம்
உழுவதற்குப்பயன்படும் மரத்தாலான கருவி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
plough
hold-all for keeping musical instruments
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குறும் சாட்டு உருளையொடு கலப்பை சார்த்தி – பெரும் 188 குறிய சகடத்தின் உருளையோடு கலப்பையையும் சார்த்தி வைக்கப்பட்டமையால் தலை புணர்த்து அசைத்த பல் தொகை கலப்பையர் இரும் பேர் ஒக்கல் கோடியர் – அகம் 301/22,23 தலையினைச் சேர்த்துக்க் கட்டிய பல தொகையாகிய இசைக்கருவிகளின் பையினராகிய மிகப் பெரிய சுற்றத்தினையுடைய கூத்தர்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்