சொல் பொருள்
(வி) 1. கல, 2. கலக்கமெய்து, 3. மேலும் கீழும் அசை,
சொல் பொருள் விளக்கம்
1. கல,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
mix, unite, join together, get perplexed, move up and down
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கொழு மடல் அகல் இலை தளி தலை கலாவும் பெரு மலை நாடன் கேண்மை நமக்கே – நற் 309/5,6 கொழுத்த மடலில் உள்ள அகன்ற இலையில் மழைத்துளிகள் சேர்ந்து ஒன்றாயிருக்கும் பெரிய மலையைச் சேர்ந்தவனுடைய நட்பு நமக்கு கோடல் நீடு இதழ் கண்ணி நீர் அலை கலாவ – நெடு 5,6 காந்தளின் நீண்ட இதழ்களால் கட்டிய கண்ணி நீர் அலத்தலால் கலக்கமெய்த இயல் அணி பொலிந்த ஈகை வான் கழல் துயல்வரும்-தோறும் திருந்து அடி கலாவ – குறி 126,127 இயற்கையான அழகால் பொலிவு பெற்ற பொன்னாலாகிய உயர்ந்த (வீரக்)கழல் (அடி எடுத்துவைத்து)இயங்கும்போதெல்லாம் திருத்தமான கணுக்காலில் உயர்ந்தும் தாழ்ந்தும் அசைய
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்