சொல் பொருள்
1 (வி) 1. பெருமையுணர்வு கொள், 2. செழி, தழை, 3. வேகமாகு, 4. மகிழ், 5. செருக்கித்திரி,
2. (பெ) 1. பெருக்கம், 2. ஆரவார ஒலி, 3. செருக்கு,
சொல் பொருள் விளக்கம்
பார்க்க மான்று
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
be lofty, elated, grow luxuriantly, be swift, quick, rejoice, be arrogant, increasing, swelling, roaring sound, pride, haughtiness
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கலி மயில் அகவும் வயிர் மருள் இன் இசை – நெடு 99 செருக்கின மயில் ஆரவாரிக்கும், ஊது கொம்பின் ஓசையோ என்று எண்ணத்தோன்றும் இனிய ஓசை அம் கண் அகல் வயல் ஆர் பெயல் கலித்த வண் தோட்டு நெல்லின் வரு கதிர் வணங்க – நெடு 21,22 அழகிய வெளியையுடைய அகன்ற வயலில் நிறைந்த நீரால் செழித்து வளர்ந்த வளப்பமான தாள்களையுடைய நெல்லிலிருந்து மேலெழுந்த கதிர் (முற்றி)வளைய; புள் இயல் கலி மா பூண்ட தேரே – ஐங் 481/4 பறவைகளின் தன்மை கொண்டு விரைந்துசெல்லும் குதிரைகள் பூட்டிய தேரை. கலித்த இயவர் இயம் தொட்டு அன்ன – மது 304 மகிழ்ந்த இசைஞர்கள் (தம்)இசைக்கருவிகளை முழக்கினாற் போன்று நெடு நீர் இரும் கழி கடு மீன் கலிப்பினும் – அகம் 50/2 நெடியவாய் நிறைந்த நீரைக்கொண்ட பெரிய கழியில் சுறாமீன்கள் செருக்கித் திரிந்தாலும் ஒலி ஓவா கலி யாணர் – மது 118 ஆரவாரம் ஒழியாத பெருக்கினையுடைய புதுவருவாய் பணிலம் கலி அவிந்து அடங்க – மது 621 சங்குகள் தம் ஆரவார ஒலி குறைந்து அடங்கிப்போக, புலி என்று ஓர்க்கும் இ கலி கேழ் ஊரே – கலி 52/18 புலி என்று உன்னை எண்ணிக்கொள்வர் இந்த செருக்கு பொருந்திய ஊர்மக்கள்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்