சொல் பொருள்
கல்லும் கரைதல் – இரக்கமில்லானும் இரங்கல்
சொல் பொருள் விளக்கம்
கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பது பழமொழி. கல்லையும் கரைய வைக்க முடியும் என்பதை அது காட்டும். ஆனால் இக்கல் கரைதல் , கல் போன்ற உள்ளம் கரைந்து – இரங்கி – உதவுதலாம். சிலர் கையை அறுத்துக் கொண்டாலும், “தொட்டுத் தடவச் சுண்ணாம்பும் தாரார்’ எனப் பேர் பெற்றிருப்பர். அத்தகையரும் சில வேளைகளில் ஏதோ உதவக் கண்டால், “அந்தக் கல்லுமா கரைகிறது. அந்தக் கல்லுக்குள்ளுமா ஈரம் இருக்கிறது” என்பர். இரங்காதவர் இரங்கல் என்பது பொருளாம்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்