Skip to content

சொல் பொருள்

(பெ) களாப்பழம்,

சொல் பொருள் விளக்கம்

களாப்பழம்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

fruit of carissa spinarum

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

களங்கனி அன்ன கதழ்ந்து கிளர் உருவின்
வணர்ந்து ஏந்து மருப்பின் வள் உயிர் பேரியாழ் – மலை 36,37

களாப்பழத்தை ஒத்த, சீறியெழுந்து நிற்கும் தோற்றத்தையும்,
 வளைந்து உயர்ந்த கொம்பினையும் உடைய பெரிதாய் ஒலிக்கும் பேரியாழ் என்ற பெரிய யாழை

இளம் பிறை அன்ன கோட்ட கேழல்
களங்கனி அன்ன பெண்_பால் புணரும் – ஐங் 264/1,2

இளம்பிறையைப் போன்ற கொம்பினையுடைய காட்டுப்பன்றி
களங்கனியைப் போன்ற தன் பெண்பன்றியினைப் புணர்ந்திருக்கும்

களங்கனி அன்ன கரும் கோட்டு சீறியாழ் – புறம் 145/5

களாப்பழம் போன்ற கரிய கோட்டையுடைய சிறிய யாழை

பார்க்க : களா

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *