சொல் பொருள்
(வி) 1. இடி, 2. இடித்துரை, 3. இகழ், 4. கூறு. சொல்,
சொல் பொருள் விளக்கம்
இடி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
thunder, rebuke, dishonour, discredit, say, tell
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கடு விசை உருமின் கழறு குரல் அளைஇ – குறு 158/2 மிகுந்த வேகத்தையுடைய பேரிடியின் இடிக்கும் முழக்கத்தோடு கலந்து நின்னை யான் கழறுதல் வேண்டுமோ – கலி 100/22 உன்னை நான் கடிந்துரைக்கவும் வேண்டுமோ? அவை புகு பொருநர் பறையின் ஆனாது கழறுப என்ப அவன் பெண்டிர் – அகம் 76/5,6 அவையில் புகும் பொருநரின் பறையைப்போல ஒழியாமல் என்னை இகழ்வர் என்று கூறுவர் அவன் பெண்டிர் எ வாய் சென்றனை அவண் என கூறி அன்னை ஆனாள் கழற – நற் 147/4,5 எவ்விடத்துக்குச் சென்றாய் அங்கே? என்று கூறி அன்னை மனம் அமையாதவளாய் நம்மிடம் கூற
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்