சொல் பொருள்
1.(வி) அரும்பு, முகிழ், 2. (பெ) கழுவுதல்,
சொல் பொருள் விளக்கம்
அரும்பு, முகிழ்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
bud, blossom, washing
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கடும் சூல் முண்டகம் கதிர் மணி கழாஅலவும் – சிறு 148 முதல் சூலையுடைய கழிமுள்ளி ஒளியையுடைய நீலமணிபோலப் பூக்கவும் – கழாஅல் – கழுதல், அரும்புதல் – ச.வே.சு.விளக்கம் ஊர் குறு_மாக்கள் வெண் கோடு கழாஅலின் நீர் துறை படியும் பெரும் களிறு போல – புறம் 94/1,2 ஊரின்கண் சிறுபிள்ளைகள் தனது வெள்ளிய கோட்டைக் கழுவுதல் காரணமாக நீரையுடைய துறைக்கண் படியும் பெரிய களிற்றினைப் போல – கழாஅலின் என்பதற்குக் கழுவப்படுதலான் எனினும் அமையும் – ஔ.சு.து.உரை, விளக்கம் கலம் கழாஅலின் துறை கலக்கு_உற்றன – புறம் 345/4 படைக்கலங்களைக் கழுவுவதால் நீர்த்துறைகள் குழம்பிவிட்டன.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்