சொல் பொருள்
கழித்தல் – கருக்கலைப்பு
சொல் பொருள் விளக்கம்
கழித்தல் கணக்கில் உண்டு. கழித்துக் கட்டல். ஒதுக்கி விடல் தீர்த்துவிடல் பொருளில் உண்டு. ஆனால் இக்கழித்தல் அவ்வகைப்பட்டதன்று. கழிப்புக்குப் பண்டுவச்சியர் முன்பே இருந்தனர். அப்பொழுது கழிப்பது, பழிப்பதற்கு இடமான செயலாக இருந்தது. கருச் சிதைத்தல் கடும்பாவம் என்னும் கருத்தும் இருந்தது. இதுகால் மலச்சிக்கல் நீக்க மருத்துவம் போல இயல்பாகிவிட்டது. “இப்பொழுதே கழித்துவிட்டால் எளிது” “கழிக்க நாட்பட்டால் வெளிப்பட்டுவிடும்” “கழிக்க ஒன்றும் சுணக்கம் இல்லை, எவருக்கும் ஐயம் வராது” என்பனவெல்லாம் எங்கும் கேட்கும் செய்திகள். எவரும் அறியார் என அறிந்து அறியச் செய்யும் செயல்கள்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்