சொல் பொருள்
கழுக்கு – பூண் தேய்ந்துபோன உலக்கை.
மழுக்கு – கூர் மழுங்கிப் போன அரிவாள் முதலிய கருவிகள்.
சொல் பொருள் விளக்கம்
கழுக்காகவும், மழுக்காகவும் இருப்பவை செவ்வையற்றைனவாய்ப் பயன்படுத்துவதற்கு உதவாதனவாய் அமைந்தனவை. அவற்றைப்போல், உழைப்புக்கு உதவாமல் இருப்பவனைக் கழுக்கா மழுக்காவாய்த் திரிகிறான் என்பது வழக்கு.
“கழுந்தராய் உன்கழல் பணியாதவர்” என்பதில் கம்பர் கழுந்து என்பதைப் பயன்படுத்துகிறார். கழுந்து பூண்போன உலக்கையாம். மழுங்குதல் – மொட்டையாதல் பொருளில் இன்றும் வழங்குகின்றது. இதனைக் கழுக்கட்டி மழுக்கட்டி’ என்பதும் வழக்கு.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்