சொல் பொருள்
(பெ) 1. ஒரு சேரநாட்டு ஊர்,
2. ஒரு சோழ நாட்டு ஊர்,
சொல் பொருள் விளக்கம்
ஒரு சேரநாட்டு ஊர்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a city in chEra country
a cityin chOzha country
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சேரநாட்டில் ஒரு கழுமலம் இருந்தது. அதனை ஆண்டுவந்த அரசன் குட்டுவன். தலைவியின் மேனி இந்தக் கழுமலம் என்னும் ஊரைப்போல அழகுடன் திகழ்ந்ததாக அகம் 270 குறிப்பிடுகிறது நல் தேர் குட்டுவன் கழுமலத்து அன்ன அம் மா மேனி தொல் நலம் தொலைய – அகம் 270/9,10 நல்ல தேரினையுடைய குட்டுவனது கழுமலம் என்னும் ஊரினைப் போன்ற அழகிய மாமை நிறம் வாய்ந்த மேனியின் பழைய அழகு கெட சோழநாட்டிலுள்ள சீர்காழிக்கு வழங்கும் பெயர்களில் ஒன்று கழுமலம் உறையூர் அரசன் செம்பியன் தான் போரில் வென்றவர்களின் குடைகளைக் கழுமலத்துக்குக் கொண்டுவந்தான் குடையொடு கழுமலம் தந்த நல் தேர் செம்பியன் பங்குனி விழவின் உறந்தையொடு – நற் 234/5-7 பகைவரின் வெண்கொற்றக்குடையோடு கழுமலம் என்ற ஊரைக் கைப்பற்றிய நல்ல தேரையுடைய சோழனின் பங்குனி விழாவின்போதான உறந்தைநகரோடு அழும்பில் அரசன் பெரும்பூட் சென்னி தன் படைத்தலைவன் பழையனை வீழ்த்திய எழுவர் கூட்டணியோடு தானே முன்னின்று போரிட்டு அகப்பட்ட கணையனைக் கழுமலத்துக்குக் கொண்டுவந்து சிறையிலிட்டான் கணையன் அகப்பட கழுமலம் தந்த பிணையல் அம் கண்ணி பெரும் பூண் சென்னி – அகம் 44/13,14 கணையன் உட்பட கழுமலம் என்னும் ஊரைக் கைப்பற்றிய கட்டிய கண்ணியினை உடைய பெரும்பூண் சென்னி என்பானது பார்க்க : கணையன்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்