சொல் பொருள்
(வி) 1. நிறை, 2. கல,
சொல் பொருள் விளக்கம்
நிறை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
be full, mix together
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குவளை உண்கண் குய் புகை கழும தான் துழந்து அட்ட தீம் புளி பாகர் – குறு 167/3,4 குவளை போன்ற மையுண்ட கண்களில் தாளிதப்புகை நிறைய, தானே முயன்று துழாவிச் சமைத்த சுவையான புளித்த மோர்க்குழம்பினை கழுமிய வென் வேல் வேளே – புறம் 396/12 பிற படையுடன் கலந்த வெல்லும் வேற்படையையுடைய வேளிர் தலைவன்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்