சொல் பொருள்
(பெ) 1. பல தெருக்கள் கூடுமிடம் /பிரியும் இடம், 2. ஒரு கிழங்கு, கிழங்குள்ள ஒரு கொடி, 3. மனச் சஞ்சலம்
சொல் பொருள் விளக்கம்
பல தெருக்கள் கூடுமிடம் /பிரியும் இடம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Place where several ways meet or diverge
a rooted creeper
distress, affliction
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உல்கு உடை பெரு வழி கவலை காக்கும் – பெரும் 81 சுங்கம் கொள்ளுதலையுடைய பெரிய வழிகளில் பிரியும் வழியைப் பாதுகாக்கின்ற கவலை முற்றம் காவல் நின்ற – முல் 30 நாற்சந்தியான முற்றத்தில் காவலாக நின்ற கவலை அம் குழும்பின் அருவி ஒலிப்ப – மது 241 கவலைக்கிழங்கு எடுத்த குழிகளில் அருவிநீர் (விழுந்து)ஒலிக்க, பேதை நெஞ்சம் கவலை கவற்ற – நற் 144/4 பேதை நெஞ்சம் மனச்சஞ்சலத்தால் வருந்த
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்