சொல் பொருள்
(பெ) கவளம், உணவு,
சொல் பொருள் விளக்கம்
கவளம், உணவு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
elephant fodder rolled into a ball, food
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கொடி ஏற்று வாரணம் கொள் கவழ மிச்சில் – பரி 19/91 கொடியேற்றிய யானை உண்கின்ற கவளத்தின் மிச்சிலை கரும்பு கவழம் மடுப்பார் – பரி 19/34 கரும்பினையும் சோற்றுக் கவழங்களையும் அந்த யானைகளுக்கு ஊட்டுவர் கரும்பினை உணவாக ஊட்டாநிற்பர் – பொ.வே.சோ.உரை கவழம் அறியா நின் கை புனை வேழம் – கலி 80/6 கவளம் உண்பதை அறியாத கையால் செய்யப்பட்ட உன் பொம்மை யானையை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்