கவிர் என்பது கல்யாண முருங்கை, முள்முருங்கை மரம்
1. சொல் பொருள்
(பெ) முள்முருங்கை மரம்,
2. சொல் பொருள் விளக்கம்
முள்முருக்கு, முள்முருங்கை மரம், கிளைகளில் முட்களைக் கொண்ட ஒரு மரம் ஆகும். கல்யாண முருங்கை முள்முருங்கை, கிஞ்சுகம், கவிர், புழகு, முள்முருக்கு, மலை எருக்கு போன்ற பெயர்கள் உண்டு.
மரத்தின் தண்டில் முட்கள் ஆங்காங்கே இருப்பதால், ‘முள்’முருங்கை என்று பெயர் பெற்றது. முருக்கு (பலாசம்) மற்றும் முள் முருக்கு ஆகிய தாவரங்கள், ஒரே தாவரக் குடும்பத்தைச் சேர்ந்ததால், வேறுபடுத்திக் காட்ட ‘முள்’முருக்கு எனும் பெயர் சூட்டப்பட்டிருக்கலாம்
முருங்கை போல் கிளைகளை வெட்டி வைத்தால் வேர் பிடித்து வளரும் தன்மையுடையது.
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
Indian coral tree, Erythrina variegata, erythrina indica, lam.
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
பருத்திப் பெண்டின் சிறு தீ விளக்கத்துக் கவிர் பூ நெற்றி சேவலின் தணியும் – புறம் 326/5,6 பருத்தி நூற்கும் பெண்டினுடைய சிறிய விளக்கொளியில் முருக்கம்பூவைப் போன்ற கொண்டையை உடைய சேவலைக் கண்டு அச்சம் தணியும் செந்நிறமான இதழுக்கு உவமை கூற கல்யாண முருங்கையின் மலர்கள் தகுந்தவை என இலக்கிய மாந்தர்கள் ‘கவிர் இதழ்’ எனும் பதத்தைக் கையாண்டிருக்கின்றனர் கவிர் இதழ் அன்ன தூவி செ வாய் - குறு 103/2 கவிர் ததை சிலம்பில் துஞ்சும் கவரி - பதி 11/21 கார் அணி கூந்தல் கயல் கண் கவிர் இதழ் - பரி 22/29 கவிர் இதழ் அன்ன காண்பு இன் செ வாய் - அகம் 3/15 கதிர்த்த சென்னி கவிர் பூ அன்ன - அகம் 367/11 கவிர் பூ நெற்றி சேவலின் தணியும் - புறம் 326/6 கல்லிய கவிர் செ வாயான் கருதிய துயரம் கான்றான் - தேம்பா:26 98/4
கரை நின்று உதிர்த்த கவிர் இதழ் செ வாய் - மது:13/164 கடி பகை நுண் கலும் கவிர் இதழ் குறும் கலும் - வஞ்சி:30/57
கவிர் இதழ் செம் வாய் காஞ்சனமாலை கை - உஞ்ஞை:56/67 கவிர் ஒளி செக்கர் கற்றை ஓதியா மழை உண் கண்ணா - சுந்:2 180/3
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்