சொல் பொருள்
(வி) 1. கிளைத்துப்பிரி, 2. சேர், 3. அணை, 4. அகத்திடு, கொண்டிரு
சொல் பொருள் விளக்கம்
கிளைத்துப்பிரி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
fork, join with, embrace, contain within oneself
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புலி கோள் பிழைத்த கவை கோட்டு முது கலை – ஐங் 373/2 புலியின் பிடியிலிருந்து தப்பித்த கிளைப்பட்ட கொம்புகளையுடைய முதிய கலைமான் பகட்டு ஆ ஈன்ற கொடு நடை குழவி கவை தாம்பு தொடுத்த காழ் ஊன்று அல்குல் – பெரும் 243,244 எருதுகளோடு கூடிய பசுக்கள் ஈன்ற வளைந்த அடிகளையுடைய கன்றுகளைச் சேர்த்துக்கட்டின நெடிய தாம்புகள் கட்டிக்கிடக்கின்ற தறிகள் நட்ட பக்கத்தினையும், தான் அவள் சிறுபுறம் கவையினன் – ஐங் 404/2 தான் அவளின் முதுகினைத் தழுவுவான் புதல்வன் கவைஇய தாய் புறம் முயங்கி – ஐங் 402/1 புதல்வனை அகத்திட்டுக்கொண்டிருக்கும் தாயின் முதுகைத் தழுவிக்கொண்டு
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்