சொல் பொருள்
கவட்டை என்னும் கவணையில் வைத்து அடிக்கும் கல்லைக் கவ்வாங்கல் என்பது நெல்லை வழக்காகும்
சொல் பொருள் விளக்கம்
கவட்டை என்னும் கவணையில் வைத்து அடிக்கும் கல்லைக் கவ்வாங்கல் என்பது நெல்லை வழக்காகும். “கவ்வக் கலந்து” என்பார் வள்ளலார். இரண்டறக் கலத்தல் அது. கல் கவட்டையில் இறுக்கமாக இருப்பது குறிக்கும் இது வில்லை இறுக்கிப் பிடிக்கும் கை (வில்லக விரல்) என்னும் சங்கத் தொடரை நினைவூட்டும். புலவர் வில்லக விரலினார் கவட்டை என்பது இருதலைக் கட்டை. கவை = இரண்டு கவட்டையைக் கவண்டி என்பது பேராவூரணி வட்டார வழக்கு. கவுட்டை என்பது கோவை வழக்கு.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்