சொல் பொருள்
(பெ) 1. எள்ளின் இளங்காய், 2. பழிச்சொல், 3. ஒலி,
சொல் பொருள் விளக்கம்
எள்ளின் இளங்காய்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Green sesamum seed, slander, scandal, sound, noise, din
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஒருசார் சிறுதினை கொய்ய கவ்வை கறுப்ப – மது 271 சிறிய தினைக்கதிர்கள் கொய்யப்பட, எள்ளின் இளங்காய்கள் முற்றிக்கறுக்க, வெம் வாய் பெண்டிர் கவ்வை தூற்ற – நற் 133/6 கொடியனவற்றைப் பேசும் பெண்டிர் பழிச்சொற்களைத் தூற்ற, செவ்வி கொள் வரகின் செம் சுவல் கலித்த கவ்வை நாற்றின் கார் இருள் ஓர் இலை – குறு 282/1,2 பருவத்தே வளர்ந்த வரகின் சிவந்த மேட்டுநிலத்தில் தழைத்த ஒலி எழுப்பும் நாற்றின் மிக்க கருநிறமுடைய ஒற்றை இலையை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்