சொல் பொருள்
(வி) 1. காண்பதற்கு இனிமையாக இரு(த்தல்), 2. காணத்தோன்று, காட்சியுறு,
சொல் பொருள் விளக்கம்
காண்பதற்கு இனிமையாக இரு(த்தல்),
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
be very pleasant to look at
come into view, be sighted
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நறு மலர் காண்வரும் குறும் பல் கூந்தல் – அகம் 116/7 நறிய மலர்கள் வேய்ந்த காண்டற்கு இனிய பலவாய கூந்தலினையும் – நாட்டார் உரை காண்வர விரி உளை பொலிந்த வீங்கு செலல் கலி_மா – நற் 121/7,8 காண்பதற்கு அழகாக விரிந்த தலையாட்டம் பொலிந்த விரைந்து செல்லும் செருக்குடைய குதிரையை அழி துளி தலைஇய புறவின் காண்வர வான் அர_மகளோ நீயே – ஐங் 418/2,3 மிக்க மழைத்துளிகள் பொழிதலுற்ற காட்டினிடையே யான் கண்கூடாகக் காண்டல் உண்டாக என் முன்னே தோன்றுதற்கு நீ தான் வானத்து உலவும் தெய்வ மகளோ? – பொ.வே.சோ உரை மிக்க மழையை ஏற்றுக்கொண்ட காட்டிடையே காட்சியுறத் தோன்றுதலின் நீ வானர மகளோ, கூறுக – ஔ.சு.து.உரை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்