சொல் பொருள்
(பெ) 1. கடற்கரை, 2. கடற்கரைச் சோலை,
சொல் பொருள் விளக்கம்
கடற்கரை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
seashore
Grove or forest on the sea-shore
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கானல் வெண் மணல் கடல் உலாய் நிமிர்தர – சிறு 150 கரையிடத்துள்ள வெள்ளிய மணற்பரப்பிலே கடல் பரந்து ஏறுதலானும் பெரும் கடல் முழங்க கானல் மலர – நற் 117/1 பெரிய கடல் முழங்காநிற்பவும், கடலருகிலுள்ள சோலை ஒருங்கே மலர்தலைச் செய்யவும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்