சொல் பொருள்
கான் என்பது கோட்டையூர் வட்டார வழக்கில் சாய்க்கடை ஆகிய வடிகாலைக் குறிக்கிறது
சொல் பொருள் விளக்கம்
ஒருவரிசை வாழைக்கும் மற்றொரு வரிசை வாழைக்கும் உள்ள இடைவெளியைக் கான் என்பது தூத்துக்குடி வட்டார வழக்கு ஆகும். காண்டு என்பது கொடிக்கால் இடைவெளிப் பெயராக இருப்பதை அறியலாம். கால் என்பது வாய்க்கால். இரண்டு வரிசைக்கும் இடையே உள்ள ‘கால்’ ‘கான்’ ஆகும். பால் மொழி, பான் மொழி என்றாவது போல் கான் என்பது கோட்டையூர் வட்டார வழக்கில் சாய்க்கடை ஆகிய வடிகாலைக் குறிக்கிறது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்