சொல் பொருள்
விளவங்கோடு வட்டார வழக்கில் காப்பாண்டி என்பது திருடனைக் குறித்து வழங்குதல் ‘காப்பானில் காப்பான்’ கள்வன் என்பதைக் காட்டுகின்றது.
சொல் பொருள் விளக்கம்
பொருளைக் காப்பதில் எவருக்கும் அக்கறை யுண்டு. அப்படிக் காத்தாலும் அதனைக் களவு கொள்ளும் கள்வர்க்கு அதனைக் கொள்வதில் மிகவும் அக்கறையுண்டு. அதனால், “காப்பான் பெரிதா? கள்வன் பெரிதா?” என்றொரு பழமொழி உண்டாயிற்று. விளவங்கோடு வட்டார வழக்கில் காப்பாண்டி என்பது திருடனைக் குறித்து வழங்குதல் ‘காப்பானில் காப்பான்’ கள்வன் என்பதைக் காட்டுகின்றது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்