Skip to content

சொல் பொருள்

(பெ) மன்மதன் : பார்க்க : காமவேள்

சொல் பொருள் விளக்கம்

மன்மதன் : பார்க்க : காமவேள்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

நான்மாடக்கூடல் மகளிரும் மைந்தரும்
தேன் இமிர் காவில் புணர்ந்திருந்து ஆடும்-மார்
ஆனா விருப்போடு அணி அயர்ப காமற்கு
வேனில் விருந்து எதிர்கொண்டு – கலி 92/65-68

மதுரை நகரத்து மகளிரும் மைந்தரும்
தேனீக்கள் ஒலிக்கும் மலர்வனத்தில் ஒன்றாகச் சேர்ந்து விழாக்கொண்டாடும்படியாக
குன்றாத ஆர்வத்துடன் தம்மை அழகுசெய்துகொள்வர், மன்மதனுக்கு
வேனிற்காலத்து விருந்தினைப் படைக்க எதிர்கொண்டு”.

பண்டாரம் காமன் படை உவள் கண் காண்-மின் – பரி 11/123

காமதேவனின் கருவூலமும், படைக்கலங்களும் ஆகும் இவளின் கண்களைப் பாருங்கள்!

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *