Skip to content

சொல் பொருள்

(பெ.அ) 1. விரும்பத்தக்க, விருப்பம் வரும், 2. அழகிய,

சொல் பொருள் விளக்கம்

விரும்பத்தக்க, விருப்பம் வரும்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

desirable, beautiful

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கண் போல் மலர்ந்த காமரு சுனை மலர் – திரு 75

– ’காமம் வரும்’ என்பது விகாரத்தால் ’காமரு’ என நின்று ’கண்டார்க்கு விருப்பம் வரும்’ என்பதாயிற்று
என்பர் அடியார்க்கு நல்லார் – திருமூகாற்றுப்படை – அடிக்குறிப்பு -உ.வே.சா

காமரு தகைய கான வாரணம் – நற் 21/8

விரும்பத்தக்க அழகுபொருந்திய கானக்கோழி
– ஔ.சு.து.உரை

காமரு வையை சுடுகின்றே கூடல் – பரி 24/4

கண்டார்க்கு விருப்பம் வருதற்குக் காரணமான வையையாற்றின்கண் பெருகிய வெள்ளம் மதுரைக்கு விரைந்து வந்தது.
பொ.வே.சோ.உரை

மா மலை பயந்த காமரு மணியும் – புறம் 218/2

பெரிய மலை தரப்பட்ட விரும்பத்தக்க மணியும்
– ஔ.சு.து.உரை

காமரு பழன கண்பின் அன்ன – புறம் 334/1

அழகிய நீர் நிலைகளில் வளர்ந்திருக்கும் சண்பங்கோரையின் கதிர் போன்ற
– – ஔ.சு.து.உரை

தேம் கொள் மருதின் பூம் சினை முனையின்
காமரு காஞ்சி துஞ்சும் – புறம் 351/10,11

தேன் பொருந்திய மருத மரத்தின் பூவொடு கூடிய கிளைகளில் தங்குதலை வெறுப்பின்
அழகிய காஞ்சிமரத்தின்கண் உறங்கும்
– – ஔ.சு.து.உரை

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *