சொல் பொருள்
(பெ) 1. விருப்பம், ஆசை, 2. அழகு,
சொல் பொருள் விளக்கம்
விருப்பம், ஆசை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
desire, wish
beauty, loveliness
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: காமர் பொருள்பிணி போகிய நாம் வெம் காதலர் சென்ற ஆறே – நற் 186/9,10 விரும்பத்தக்க பொருள்குறித்துப் பிரிந்து சென்ற நாம் விரும்பும் காதலராகிய தலைவர் செம்ற வழிகள் கரும் கோட்டு இரலை காமர் மட பிணை – அகம் 74/9 கரிய கொம்பினையுடைய ஆண்மானினது அழகிய இளைய பெண்மான்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்