சொல் பொருள்
(பெ) காமன், மன்மதன்
சொல் பொருள் விளக்கம்
காமன், மன்மதன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
indian Cupid, God of love
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: எழுது எழில் அம்பலம் காமவேள் அம்பின் தொழில் வீற்றிருந்த நகர் – பரி 18/28,29 ஓவியம் எழுதப்பட்ட அழகையுடைய அம்பலம், காமவேளுடைய அம்பின் தொழில் வீற்றிருக்கும் மண்டபமாகத் திகழும்; காமவேள் விழவு ஆயின் கலங்குவள் பெரிது என – கலி 27/24 காமவேளுக்குரிய விழா நடக்கும்போது கலங்கிப்போவாளே பெரிதும் என்று
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்